October 27, 2021

பெரியபாளையத்தில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் ஹாப்பிடேட் இம்முநிடி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தமிழக அரசு உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் நலிவுற்ற பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அதே போல், மாற்றுத்திறனாளிகளுக்கு
பெரியபாளையம் பகுதியில் வாழும் பழங்குடியினர் மக்கள் , கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தொண்டு நிறுவனத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் பொன்.பரசுராமன் தலைமையில் 100 பேருக்கு 10 கிலோ கோதுமை மாவு, 5 கிலோ அரிசி, சர்க்கரை , எண்ணெய் உள்ளிட்ட மளிகை அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.குமார் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு மற்றும் 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இளங்கோ, செல்வி, குப்புசாமி, வேலு மயில் மற்றும் அமரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கரை, தாமரை குப்பம், கோடுவேலி, மிட்டை பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,500 குடும்பங்களுக்குத் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது,

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed