October 27, 2021

பொன்னேரியில் ரேஷன் அரிசி கடத்தி கைது செய்யப்பட்ட நபர் தப்பி ஒட்டம், 2 மணி நேரத்தில் குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சக்தி நகரில் 2 லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி துணை ஆய்வாளர் மகாலிங்கம் அவர்ளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு துணை ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையில் போலிசார் சென்று பார்த்த போது, 2 லாரிகளில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டைகளாக இருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை கைது செய்து பொன்னேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது விசாரணை செய்ததில் பொன்னேரியில் இருந்து ஆந்திராவுக்கு 2 லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாகவும், அவை 3 டன் எடை எனவும், பொன்னேரி பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டின் மற்றும் ஆரணியை சேர்ந்த முனுசாமி என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, திருவள்ளூரில் உள்ள குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, பொன்னேரி போலீசார் தகவல் கொடுத்து, 3 டன் ரேஷன் அரிசியுடன், கைது செய்யப்பட்ட 2 பேரையும் ஒப்படைத்தனர்.
அவர்களை காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். அப்போது, முனுசாமி என்பவர், வாகனத்தில் இருந்து கீழே குதித்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்தார். உடனடியாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தப்பி ஓடிய முனுசாமியை தீவிரமாக தேடினர்.

தப்பி ஓடிய முனுசாமி
கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் புதுவாயல் பகுதியில் ஓடி கொண்டிருந்த போது முனுசாமியை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து மீண்டும் கைது செய்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed