October 27, 2021

லால்குடி அருகே சிறுகனூர் பகுதியில் தினமணி செய்தியாளர் ஓட்டிச்சென்ற கார் மரத்தில் மோதிய விபத்தில் இருவர் பலி…

1 min read
Spread the love

இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திருச்சியில் இருந்து சென்னை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே சிறுகனூர் பகுதியிலுள்ள ரானே கம்பெனி அருகே ஒரு சிவப்பு நிற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, காரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே விபத்தில் சிக்கி இறந்து போனது தெரியவந்தது.

மேலும், போலிசார் அடையாள அட்டையில் இருந்த விவரங்களை வைத்து விசாரித்ததில்,
அந்த காரை ஓட்டி வந்தவர் தினமணி செய்தியாளர் கோபி என்பதும் , இடதுபுறமாக அமர்ந்து வந்தவர் அவருடைய நண்பர் செந்தில் குமார் என்பதும் தெரியவந்தது.
போலீசார் விபத்தில் சிக்கிய செய்தியாளர் கோபி மற்றும் அவர் நண்பருடைய உடல்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed