October 27, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் 55 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு, அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்…

1 min read
Spread the love

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை நீர் வடிகால்களை பருவ மழைக்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் இடங்கள், மழை நீர் வெளியேற முடியாத பல்வேறு பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் மொத்தம் 55 தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு அந்த பகுதிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,

அவசர தேவைக்கு மக்களை தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்ட அனைத்து முகங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஊராட்சி , பேரூராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன், அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி சி கதிர்வேலு, அத்திபட்டு புதுநகர் வார்டு உறுப்பினர் ஆகியோர் உடன் இருந்து அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறக் கூடிய வழிகளையும், அதிலுள்ள பிரச்சினைகளையும் எடுத்துக்கூறினர்.

மேலும், அத்திப்பட்டு ஊராட்சி மன்றத்தின் சார்பில், துணைத் தலைவர் எம்.டி.ஜி கதிர்வேலு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதில், தாங்கள் ஏரி தூர்வாரப்பட்டு கரைகளை பலப்படுத்த வேண்டும். இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு செல்லக்கூடிய ரயில்வே பாதையில் மழைநீர் தேங்கி நிற்காமல் செல்வதற்கு வசதியாக புதியதாக கல்வெட்டு அமைக்கப்பட வேண்டும். என்.டி.இ.சி.எல் நிறுவனத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் புதியதாக நான்கு கல்வெட்டுக்கள் அகலப்படுத்தி அமைக்கப்பட வேண்டும். அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள மேம்பாலம் முதல் அத்திப்பட்டு புதுநகர் ரயில்வே நிலையத்தை ஒட்டி உள்ள கால்வாய் முழுவதும் தூர்வாரப்பட வேண்டும்.

அத்திப்பட்டு புதுநகர் கிழக்கு பகுதியில் உள்ள உப்பங்கழனியில் இருந்து பீ.பி.சி.எல் நிறுவனம் சுற்று சுவர் வரை மழைநீர் தேங்காமல் இருக்க தூர்வார வேண்டும்.
பீ.பி.சி.எல் நிறுவனத்தின் சுற்றுச்சுவரில் 50 அடி அகலத்திற்கு பெரிய அளவில் துளை போட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை மழைநீர் தேங்காமல் இருக்க அகலப்படுத்தி புதிதாக அமைக்கப்பட வேண்டும். எச் பி சி எல் நிறுவனத்தின் காம்பவுண்டில் அமைந்துள்ள கல்வெட்டை அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் அமைக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed