October 27, 2021

ராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் 3 நீர்த்தேக்கத் தொட்டியை தங்கபாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 2 லட்சம் (மொத்தம் 6 லட்சம்) ரூபாய் மதிப்பீட்டில் வார்டு 2 மங்கம்மாள் சாலை மெயின் ரோடு அருகில், வார்டு 5 மகாத்மா நர்சரி ஆங்கிலப் பள்ளி மேல்புறம் மற்றும் வார்டு 10 முனியாண்டி கோவில் தென்புறம் போன்ற பகுதிகளில் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

அதனை இன்று (08.10.2021) காலை 10.30 மணி அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ அவர்கள், சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படும் என கூறினார்.

இந்நிகழ்வில் செயல் அலுவலர் சந்திரகலா, பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், ஒன்றிய பொருளாளர் காந்தி , இளைஞர் அணி அமைப்பாளர் மாரிமுத்து, பேரூர் திமுக நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, கலைவானர், சாமுவேல், கணேசன் ஒப்பந்ததாரர் பொன்னுச்சாமி பேரூராட்சி பணியாளர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed