October 27, 2021

பொன்னேரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது…

1 min read
Spread the love

பொன்னேரி அடுத்த கொக்குமேடு வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி முதல்வர் ஹேமமாலினி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை பயன்படுத்தி பல்வேறு அறிவியல் படைப்புகளை உருவாக்கி அவை செயல்படும் முறைகள் பயன்கள் பற்றி ஆசிரியர்கள் முன்பு வகுப்பறைகளில் தெளிவாக விளக்கினர்.

கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகளான நீரில்மிதக்கும் வீடு, எரிமலை குழம்பு, சொட்டு நீர் பாசனம், சோலார் சிஸ்டம், நுரையீரல் செயல்முறை, ரோபோ எந்திரம், கழிவுநீர் மேலாண்மை, நீர் மின் ஆற்றல், மின்னணு வாக்கு இயந்திரம்,

கொரோனா வைரஸ் பரவும் முறை மற்றும் அதனை தடுக்கும் முறைகள் பற்றிய செயல்முறை விளக்கம், மழைநீர் சேகரிப்பு, நிலநடுக்க அறிவிப்பான், ரெயின்போ கலர், தானியங்கி சானிடைசர் தெளிப்பான், ஃபுட் கலரிங். உட்பட 200 க்கும் மேற்பட்ட படைப்புகளுக்கு மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறும்போது; அறிவியல் கண்காட்சி எங்களுடைய பள்ளியில் நடத்தப்படுவதால் எங்களுடைய அறிவுத்திறன் மேம்படுத்த படுவதோடு புதிய அறிவியல் படைப்புகள் கண்டுபிடிக்க காரணமாகவும் இதனை ஊக்குவித்த பள்ளி முதல்வர் ஆசிரியர்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தனர்.
இதில், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மில்டன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed