October 27, 2021

சோழவரம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில், காரை ஒட்டியவர் மற்றும் இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழப்பு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரது இரு மகள்கள் கனிஷ்கா (16), அஷ்விதா (14). இவர்கள் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11 மற்றும் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

இன்று காலை வழக்கம் போல இவர்கள் இருவரையும் மாணவிகளின் தாய்மாமாவான நாகராஜ் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரனோடை மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாரா விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதியது.

இதில், இடிபாடுகளில் சிக்கி +1மாணவி கனிஷ்கா, காரை ஓட்டிச் சென்ற மாணவியின் தாய்மாமா நாகராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி அஷ்விதாவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவி அஸ்விதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலையில் உறவினருடன் பள்ளிக்கு காரில் சென்ற +1 மாணவி, 9 ம் வகுப்பு மாணவி மற்றும் அவர்களது மாமா ஆகியோர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிழல் . இன் -8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed