October 27, 2021

பெரியபாளையம் அருகே காரணியில் நடந்த கவுதம் ஆணவ கொலைக்கு நீதி கேட்டு, திருமாவளவன் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

கவுதம் இறப்பை கொலை வழக்காக்க பதிவு செய்து சிபிசிஐடி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், கவுதமின் குடும்பத்தார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கவுதமின் மனைவி அதில் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடும், உரிய நீதியை வழங்க வேண்டும் என திருவள்ளூரில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்து காரணி பகுதியை சேர்ந்த கௌதம் என்பவரும் ஆவூர் பகுதியை சேர்ந்த அமுலு என்பவரும் காதலித்து இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில், இரு வேறு சமூகத்தை சேர்ந்த இருவருக்கும் கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந் நிலையில் தமது தாத்தாவின் இழப்புக்கு சென்று விட்டு வருவதாகக் கூறி சென்ற கவுதம் வீடு திரும்பாததால் 4 நாட்கள் கழித்து அங்கு சென்று பார்த்த போது கவுதம் இறந்துவிட்டதாக காரணியில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு இருந்தது.

இது குறித்து செப்டம்பர் 21-ம் தேதி ஆரணி காவல் நிலையத்தில் அமுலு புகார் அளித்திருந்தார். அதில் தமது கணவர் ஆணவ கொலை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவரது கணவரின் தந்தை, அண்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் ஆரணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் கவுதமின் தந்தை அண்ணாமலை, அண்ணன் சீனிவாசன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்த நிலையில் கவுதம் ஆணவ கொலை செய்யப்பட்டதாக கூறி திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தாத்தா இறப்புக்கு சென்ற கவுதம், இயற்கை மரணம் என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாகவும்,

அதனை காவல் துறை தற்கொலை என மூடி மறைத்து வருவதாகவும் காவல் துறையினரின் உயர் அதிகாரிகளிடம் பேசியதையடுத்து கவுதமின் தந்தை மற்றும் அண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் காவல்துறை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

கவுதம் தற்கொலை செய்யவில்லை, கொலை என அமுலு குடும்பத்தினர் தெரிவிப்பதால் இதனை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும், உள்ளூர் காவல்துறை விசாரிக்க கூடாது எனவும் சிபிசிஐடி விசாரணை அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் எனவும் கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமுலு குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், உரிய நீதியை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed