October 27, 2021

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள கண்ணபிரான் ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா மிக விமர்சியாக நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள புதுநகர் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணபிரான் ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா ஆலய நிர்வாக தலைவர் எம்.சங்கர் தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் ஆலய பொறுப்பாளர்கள் நேரு, ரமேஷ், துரைராஜ், செல்வகுமார், சம்பத் ஆகியோர் முன்னிலையில் மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஸ்ரீ மகா சுதர்சன யாக பூஜை செய்தனர்.

பின்னர் வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூப, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விழாவிற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜி.ரவி, அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணை தலைவர் கதிர்வேல், மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன், வார்டு உறுப்பினர்கள் சுமதிசங்கர், நிவேதாபிரகாஷ், அருண்ஜோதி, ஆலய நிர்வாகிகள் கார்த்திக், அம்பளாவண்ணன், ரஞ்சன், தாஸ், ஜெகதீசன், ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து விழாவை சிறப்பித்தனர். முடிவில் உற்சவர் அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடை பெற்றது. இவ்விழாவையொட்டி ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்படது.

செய்தியாளர் – சீனிவாசன் – நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed