October 27, 2021

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்கு எண்ணும் மையங்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் அவர்கள் நேரில் ஆய்வு…

1 min read
Spread the love

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில் 9 யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மேற்படி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று 12.10.2021 ம் தேதி நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையம் 8 இடங்களில் அமைக்கப்பட்டு 8 துணை காவல் காண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் சுமார் 800 காவல்துறையினரும், மேலும் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சுமார் 1,600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேற்படி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் அவர்கள் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed