December 8, 2021

பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் 100 நாள் பணியாளர்கள்ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாடினர்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் கிராமத்தில் 100 நாள் பணி செய்யும் பெண்கள் ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாடினர்.

பணி செய்யும் இடத்தில் சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பொறி கடலை, பழங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை படைத்து தாங்கள் பணி செய்யும் மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களையும் 100 நாள் பணியாளர் அட்டைகளையும் வைத்து அவர்கள் ஆயுத பூஜை விழாவை கொண்டாடினர்.

அப்போது அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.100 நாள் வேலை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக, அகல் விளக்குகளை ஏற்றியும், மண் வெட்டிகள், கடப்பரை உள்ளிட்ட ஆயுதங்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்தனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed