December 8, 2021

செங்கம் குப்பநத்தம் அணை நிரம்பியதால், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பாசன வசதிக்காக அணையை திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் குப்பநத்தம் பகுதியில் கட்டியுள்ள குப்பநத்தம் அணை அதன் முழு கொள்ளளவான 59 அடியை தற்போது எட்டியுள்ளது.

இந்நிலையில் அணைக்கு நீர் வரத்து 100 கன அடியாக உள்ளது. எனவே அணையின்
பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை மூலம் உபரி நீர் 100 கண அடி தண்ணீரை அணையை திறந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தார். மேலும் செய்யாற்று ஒட்டியுள்ள தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அணையைத் திறந்து வைத்துவிட்டு சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் செய்யாறாக உருவாகி திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்கிறது. இந்த அனைத்து மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆதாரங்களாகவும், பாசன வசதியும் வழங்கி வருகிறது.

ஆற்றின் குறுக்கே கலைஞர் அவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த குப்பநத்தம் அணை 59 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் தற்போது 57 அடிக்கு நீர் நிரம்பி உள்ளதாலும், உபரி நீரும் 100 கன அடிக்கு மேல் அணைக்கு வந்து கொண்டிருப்பதாலும் தற்போது இந்த அணை திறக்கப்பட்டுள்ளது.

இந்த அணை திறக்கப்பட்டதால் இந்த அணையில் இருந்து வெளியேறும் நீர் கலசபாக்கம், திருவண்ணாமலை , சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் பாசன வசதி பெறக்கூடிய வாய்ப்பு பெறுகின்றன, என கூறினர்.

செய்தியாளர் – குருபரன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed