December 8, 2021

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ஒன்பது வயது மாணவன், சலபாசனத்தில், தொடர்ந்து, 45 நிமிடம் நின்று உலக சாதனை படைத்தார்.

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபு, கலைச்செல்வி தம்பதியர் மகன் ஹரிஷ் கண்ணா, 9 வயது. அப்பகுதியில் இயங்கி வரும் கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.

கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகா பயின்றும் வருகிறார். தரையில் தலையை வைத்து, தலை மீது கால்களை வைக்கும் சலபாசனத்தில், தொடர்ந்து, 45 நிமிடங்கள் நின்று உலக சாதனை படைத்தார்.

மாணவனின் இந்த சாதனை, ‛இந்திய புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் ‛ஆவ்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.
சாதனை படைத்த மாணவனையும், அவரை பயிற்றுவித்த யோகா பயிற்றுனர் சந்தியாவையும், கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளா – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed