November 27, 2021

மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலர்கள் இல்லாததால், மனு கொடுக்க வந்தவர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகின்றது. இந்த ஒன்றிய அலுவலகத்தில் 56 ஊராட்சிகளுக்கான நிர்வாக பணிகள், மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த பணிகள் மேற்கொள்ளபடுகின்றன. சமீபகாலமாக இங்கு பணியாளர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பல்வேறு பிரச்சனைகளுக்காக மனு கொடுக்க வந்தவர்கள் வட்டார வளர்ச்சி ஆணையர், வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்கள் என, 12 மணி வரை யாரும் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த மனு கொடுக்க வந்தவர்கள் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்து விரக்தி அடைந்தனர்.

அவர்கள் “கோரிக்கை மனுக்களை பெற வேண்டிய அதிகாரிகள் வரும் வரை மனு கொடுக்காமல் செல்லமாட்டோம்” என வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வந்து மனு கொடுக்க வந்தவர்களை சமாதானப்படுத்த முற்பட்டனர்‌.

இதற்கிடையே, தகவல் அறிந்து ஒன்றிய குழு தலைவர் அத்திபட்டு ரவி நேரடியாக வந்து ஒன்றிய அலுவகத்தை முற்றுகையிட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தடம்பெரும்பாக்கம் ஊராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சிலர் கட்டிடம் கட்ட முற்படுவதாக கூறி புகார் மனு வழங்கினர். அதை பெற்று கொண்ட ஒன்றிய குழு தலைவர் இந்த புகார் மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed