December 8, 2021

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.ஆர் மைதானத்தில் எம்.எம் டைகர் ஸ்கேட்டிங் அகடமி இன்டர் கிளப் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

1 min read
Spread the love

இப் போட்டியில்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர்  ஸ்கேட்டிங் போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 ஸ்கேட்டிங் அகடமியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்  சட்ட உரிமைகள் கழகம் தலைவர்  டாக்டர் பி.எஸ்.எஸ். ஜெகன் மற்றும் தமிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோஷியேசன் பொது செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர்    கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த எம்.எம் ஸ்கேட்டிங் அகடமி உரிமையாளர் மற்றும் செயலாளர் ஆர். மணிகண்டன்  உட்பட பலரும்  கலந்து கொண்டனர். முடிவில்  போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசுகளை திருவெற்றியூர் டால்பின் ஸ்ப்ரெட் ஸ்கேட்டிங் அகடமி வீரர்கள் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed