December 8, 2021

பரமக்குடி அருகே இறந்த எலியுடன் நியாயவிலைக் கடையில் அரிசி விநியோகம் நுகர்வோர்கள் அதிர்ச்சி…

1 min read
Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்த நல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டோர் வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் நேற்று தனது குடும்ப அட்டைக்கான 20கிலோ அரிசியை வாங்கி வந்து காலை சமையலுக்கு பயன்படுத்த பிரிக்கும் போது துர்நாற்றம் வீசியதை கண்டு பயந்து, உடனே அரிசியை கீழே கொட்டி பார்த்துள்ளார்.
அதனுள் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது கண்டு திருக்கிட்டார்.

மேலும், அரிசியுடன் வாங்கி வந்த சர்க்கரையையும் பிரித்து பார்த்த போது அதனுள்ளும் புழுக்கள் நிறைந்து காணப்பட்டுள்ளது. உடனே அதிர்ச்சியடைந்த மாரிமுத்து வாங்கிய அரிசியையும், சர்க்கரையையும் நியாயவிலை கடைக்கு கொண்டு சென்று, அங்கு பணிபுரிபவர்களிடம் விபரம் கேட்டதற்கு முறையாக பதில் கூறவில்லை.

இதனால், கோபமடைந்த மாரிமுத்து தீபாவளி பண்டிகைக்காக வாங்கும் பொருள்களில் இப்படியொரு நிலைமையா? என கேட்டு வாசலில் கொட்டினார். இது சம்மந்தமாக, போர்க்கால அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு தரமான அரிசி, சர்க்கரை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் – மா மு ஜெயக்குமார் / பரமக்குடி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed