December 8, 2021

பழவேற்காடு ஏரியில் இரவு மீன் பிடிக்கச் சென்ற ஆண்டிக்குப்பம் மீனவர் ரமணா வலைகட்டும் போது சேற்றில் சிக்கிய நிலையில் உயிரிழப்பு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஏரி உள்ளது. இங்கு காட்டுப்பள்ளி முதல் ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவரை மிக நீண்ட ஏரிப்பகுதியில் ஏரியை ஒட்டியுள்ள மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோட்டைக்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமணா எனும் மீனவர் நேற்று இரவு பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். மீன் பிடிக்கும் வலையை பழவேற்காடு ஏரியில் உள்ள சேற்றுப் பகுதியில் நடும்போது சேற்றில் சிக்கி மாயமாகியுள்ளார். அவருடன் சென்றவர்கள் தேடியநிலையில் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

பின்பு காலையில் ஏரியில் ஒதுங்கிய அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed