November 27, 2021

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பயணி தவறவிட்ட பணத்தை விரைவாக கண்டுபிடித்த தலைமை காவலர் ராஜசேகருக்கு, போலிஸ் அதிகாரிகள் பாராட்டு…

1 min read
Spread the love

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சுதாகர் என்பவர் தொலைந்த ரூபாய் 1,34,000 யை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்துக் கொடுத்த புறக்காவல் நிலைய தலைமைக் காவலர் | அவர்கள் எ.டி.எஸ்.பி கிரன் சுருதி அவர்கள் முன்னிலையில் உரியவர் இடத்தில் வழங்கப்பட்டது. இச்செயலை பாராட்டி எஸ்.பி, அ. பவன்குமார், அவர்கள் வாழ்த்து தெரிவித்து வெகுவாக பாராட்டினார்.

சேத்துப்பட்டு அருகே உள்ள கிராமங்களில் இரவும் – பகலும் நடத்தப்படும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை…

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி ஊராட்சியில் தொடர் மணல் திருட்டு, இது இரவு பகல் என்று பாராமல் சாலையோரம் மாட்டு வண்டிகளின் மூலம் மணல்களை சேகரித்து பின்னர் அங்கிருந்து டிராக்டர் மூலம் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தொடர் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed