November 27, 2021

இராஜபாளையம் தொகுதியில் 3 காப்பகத்தில் உள்ள 201 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது சொந்த செலவில் தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கொடுத்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில் இன்று (23.10.2021) காலை 10 மணியளவில் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைப் ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகத்தில் உள்ள 201 ஆதரவற்ற குழந்தைகளுக்கள் உள்ளனர்.

அவர்களுக்கு நான்கு வருடங்களாக தீபாவளிக்கு புத்தாடை வழங்கி வந்தார். அதேபோல் இந்த ஆண்டும் ஐந்தாவது முறையாக அக்குழந்தைகளை இராஜபாளையம் ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளி கடைக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்கள் நேரடியாக அழைத்து வந்தார்.

அங்கு எம்.எல்.ஏ தங்கபாண்டியன் தனது 4,5,6 வது மாத ஊதியத்திலிருந்து ( ரூபாய் 3,15,000) பிடித்தமான புத்தாடையை குழந்தைகளே பார்த்து பார்த்து மகிழ்ச்சியுடன் தேர்வு செய்தார். பின்னர் அந்த குழந்தைகளிடம் அந்த துணிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் குழந்தைகளுடன் பேசிய எம்.எல்.ஏ அவர்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே ஆகவே அனைவரும் சிறந்தமுறையில் கல்வி கற்க வேண்டும் எனவும் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார் அதே போல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவிடுவார்.

மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் அவர்களும் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களும் தங்கம் தென்னரசு அவர்களும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினராகிய நானும் இராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் அன்றும், இன்றும், என்றும் உறுதுணையாக இருப்போம் எனக் கூறினார்,

அதனைத்தொடர்ந்து குழந்தைகளை கவனமாக காப்பகத்திற்கு செல்லுமாறும் தீபாவளி திருநாளை அனைவரையும் போல் மகிழ்ச்சியாக கொண்டாடிட வேண்டுமெனவும் நீங்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்ல அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள் எனக்கூறி எம்.எல்.ஏ அவர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed