December 8, 2021

திருவொற்றியூரில் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாநகராட்சி பெண் தூய்மை காவலருக்கு தலைமை செயலாளர் இறையன்பு திருவள்ளுவர் சிலை அன்பளிப்பு வழங்கி பாராட்டு…

1 min read
Spread the love

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கணேஷ் ராமன், இவர் பெருங்குடியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும், பழைய பிளாஸ்டிக் கவரில் சுற்றி படுக்கையின் கீழே வைத்து இருந்திகிறார். இந்நிலையில், குப்பை என நினைத்து அதனை குப்பை தொட்டியில் போட்டு விட்டதாகவும் கணேஷ் ராமன், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், திருவொற்றியூர் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்ற பெண் தூய்மை பணியாளர், ஒரு கவரில் 100 கிராம் தங்க நாணயம் இருப்பதை கண்டு, தூய்மை பணி மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்தார்.

பின்னர், மேரி அந்த 100 கிராம் தங்க நாணயத்தை சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காணாமல் போன 100 கிராம் தங்க நாணயம் கிடைத்து விட்டதாக காவல் துறையினர் அளித்த தகவலையடுத்து, தங்க நாணயத்தை சரி பார்த்து கணேஷ் ராமனிடம் சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஒப்படைத்தார்.

இதனிடையே ஏழ்மையிலும் நேர்மையுடன் 100 கிராம் தங்க நாணயத்தை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் மேரியை காவல் துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் தூய்மை காவலராக பணியாற்றி வரும் மேரி அவர்களை தலைமை செயலகம் வரவழைத்து, அவருடைய நேர்மையை பாராட்டி கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

இது கரைபடியா கரம்…

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed