November 27, 2021

பொன்னேரி அருகே, கையில் இரட்டை கம்பை சுழற்றியபடி தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி 200 மாணவ, மாணவிகள் உலக சாதனை…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் ஐயா  சுப்ரமணிய ஆசான் சிலம்பம் அகாடமி சார்பில் மெதூர் அரசுப் பள்ளி வளாகத்தில் 200 சிலம்ப மாணவர்கள் இரட்டைக் கொம்பு மூலம் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக சுற்றி உலக சாதனை நடத்தும் 
நிகழ்வை நடத்தினர்.

இதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். பல்வேறு இசைக்கு ஏற்ப மாணவர்கள் ஒருமணி நேரம் தொடர்ச்சியாக இரண்டு கைககளில் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை படைத்தது அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

இந்த சாதனை நிகழ்வானது
யுனைடெட் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது . சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலக சாதனை படைத்த சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு
பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் உஷாசசிகுமார், தலைமை ஆசிரியர் திருவரசு, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், மெதூர் சே கர், சிலம்பகலை கூடத்தின் தலைமை ஆசிரியர் ஹரிதாஸ், “கற்கை நன்றே” வஞ்சிவாக்கம் நவின், ஊராட்சி செயலாளர் தமிழரசு மற்றும் கற்கை நன்றே கல்வி அறக்கட்டளையின் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

200 மாணவ மாணவிகளுக்கும் சிறப்பான பயிற்சிகளை அளித்து இந்த சாதனை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய பயிற்சியாளர் ராஜேஷ், மற்றும் வி.ஷாம்சுந்தர், பி.ஷாம்சுந்தர் ஆகியோரை மாணவ மாணவிகளுடைய பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed