November 27, 2021

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (25-10-2021 ) ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் , கல்விக்கடன் , வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 349 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு தையல் இயந்திரத்தினையும்,1 நபர்க்கு சலவை இயந்திரத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்திரி கிருஷ்ணன் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் க.ரேணுகாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா , உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed