December 8, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதிகளில் பேரிடர் மேலாண்மை துறையின் இயக்குனர் சுப்பையன் அவர்கள் ஆய்வு செய்தார்…

1 min read
Spread the love

வடகிழக்கு பருவமழையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் சுப்பையன் அவர்கள் ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது அத்திப்பட்டு புதுநகர், பிரளயம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த அவர்,

ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதியான ஆண்டார்மடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை அவர் ஆய்வு செய்தார். பருவமழையால் மழை நீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்,

அதே நேரத்தில் தொடர் கண்காணிப்பில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணி துறையினர் ஈடுபடவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும் பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தங்க வைப்பதற்காக புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed