December 8, 2021

திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலுக்கு உட்பட்ட கமலாலய குளத்தின் தென்கரை இடிந்து விழுந்த பகுதியினை அமைச்சர் பி.கே.சேகர்பாபுநேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…

1 min read
Spread the love

திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலுக்கு உட்பட்ட கமலாலய குளத்தின் தென்கரை வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனத்த மழையினால் இடிந்து விழுந்து. அந்த பகுதியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், அவர்கள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார், அவர்கள், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது ; நீண்ட நெடியகாலம் போற்றப்பட்டு வழிபாட்டு தளமாக விளங்குகின்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலுக்கு உட்பட்ட கமலாலய குளத்தின் தென்கரை சுற்று சுவர் 101 அடி சில தினங்களுக் முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது.
இந்த செய்தியை அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலைய துறையினரோடும் , மாவட்ட ஆட்சியரிடமும் தொடர்புகொண்டு விழுந்த தெப்பகுளத்தின் சுற்று சுவரினை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்கவும், நீராட வருகின்ற பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் உத்தரவிட்டு இருந்தார்கள்.

அந்த வகையில் 26-10-2021 ஆய்வு மேற்கொண்டுள்ளோம்விழுந்த சுற்று சுவரினை உடனடியாக சரிசெய்வதற்கு சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த தெப்பக்குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள சுற்றுசுவரினை வல்லுனர்களை கொண்டு ஸ்திரத்தன்மையை ஆராய்ந்து அதற்குரிய நிதியினை ஒதுக்கீடு செய்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில் விழுந்த பகுதியினை வெகுவிரைவில் முழுவதுமாக புனரமைப்பு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , அவர்கள் தெரிவித்தார்.

இவ் ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், பழனி ஆண்டவர் திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பிரகாஷ், நகராட்சி ஆணையர் பிரபாகரன், உதவி ஆணையர் ஹரிகரன், உதவி பொறியாளர் குலோத்துங்கன், செயல் அலுவலர் கவிதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed