November 27, 2021

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர்கள் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தொளவேடு கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 70லட்ச ரூபாய் மதிப்பில் ஆரம்பபள்ளியில் 4வகுப்பறைகளை கட்டப்பட்டது. இந்த வகுப்பறைகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நவம்பர் 1முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசங்கள் அணிதல், உடல்வெப்ப பரிசோதனை, சானிடைசர் பயன்பாடு, தனிமனித இடைவெளி பின்பற்றுதல், ஆசிரியர்கள் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டு மாணவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் வெளியில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர்கள் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதிதிராவிடர் மக்களுக்கு அடிப்படை வசதிகள், வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆதிதிராவிட மக்கள் கல்வியிலும், பொருளாதார அடிப்படையிலும், சமூகத்தில் முன்னேற்றத்தை கொண்டு வர துறைரீதியாக முதலமை‌ச்ச‌ர் வழிகாட்டுதலின் பேரில் செயல்பாடுகள் இருக்கும் என்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed