November 27, 2021

கும்மிடிபூண்டியை சேர்ந்த +2 மாணவி, “துவி பாத சிரசாசனம்” 27 நிமிடம் செய்து உலக சாதனை…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரகதீஸ்வரன் – பிரியா தம்பதியர் மகள் சஷ்டிகா, (17) அங்குள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கடந்த ஆறு ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தரையில் அமர்ந்து, இரு கால்களையும் தலைக்கு பின்புறமாக வைக்க கூடிய துவி பாத சிரசாசனத்தில், சென்னையை சேர்ந்த தினேஷ், என்ற மாணவன், கடந்த ஆண்டு, 15 நிமிடங்கள் நின்று உலக சாதனை படைத்தார். அந்த சாதனையை, மாணவி சஷ்டிகா முறியடித்து, தொடர்ந்து, 27 நிமிடங்கள் நின்று புதிய உலக சாதனை படைத்தார்.

அவரது சாதனை, ‛இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் ‛ஆவ்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பிடித்துள்ளன. யோகாவில் உலக சாதனை படைத்த மாணவி சஷ்டிகா, அவருக்கு பயிற்சி அளித்த பயிற்றுனர் சந்தியா ஆகியோரை, கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் – சுடர்மதி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed