November 27, 2021

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற
விழாவில் அமைச்சர் எ.வ.வேலு 433 பயனாளிகளுக்கு ரூபாய் 82.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு மக்களின் எண்ணங்களை அறிந்து ஆட்சி செய்வது தான் நல்லாட்சி ,தற்போது தமிழகத்தில் மக்களின் நல்லாட்சி நடைபெற்று வருகிறது.

கலைஞர் ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வளர்ச்சி பெறுகிறது. அதிலும் குறிப்பாக வளர்ச்சி பெறாமல் இருந்த கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் மிருகண்டா நதி அணை கட்டப்பட்டது, பால் உற்பத்தியில் மாநில அளவில் இண்டாவது இடத்தில் உள்ளதால் கலசப்பாக்கம் தொகுதியில் அம்மாப்பாளையத்தில் பால்பவுடர் தொழிற்சாலையும், கல்வி வளர்ச்சி பெற காரப்பட்டில் கல்லூரியும் கொண்டுவரப்பட்டது.

தற்போது நடைபெற்று வரும் 5 மாத ஆட்சி காலத்தில் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கலசப்பாக்கம் தொகுதிக்கு முக்கியத்துவம் அளித்து தென்மாதிமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை கல்லூரியும், இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்,

கலசப்பாக்கம் தொகுதிக்கு முக்கியத்துவம் அளித்து இத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.

இவ்விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் , செங்கம் சட்டபேரவை உறுப்பினர் மு.பெ.கிரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed