November 27, 2021

ஊத்துக்கோட்டை அருகே 500 கர்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்பிணி பெண்களுக்கான சமூதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அனைவரையும்
பூண்டி கிழக்கு ஒன்றிய கழக தி.மு.க. செயலாளர் டி.கே.சந்திரசேகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு 500 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் , புடவை உள்ளிட்ட அடங்கிய பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பின்னர் கர்பிணிகளுக்கு 5 வகையான சாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி, பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், கச்சூர் வட்டார மருத்துவர் பால மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி , மற்றும் மாவட்ட கவுன்சிலர் சுதாகர், சுப்பிரமணி, சிவய்யா, சித்ரா பாபு, விஜயன், பாபு, செங்கை ரவி, சீனிவாசன், பிரபா, தமிழ்ச்செல்வன், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி. லோகேஷ், ஊத்துக்கோட்டை நிர்வாகிகள் அபிராமி குமரவேல், ராதாகிருஷ்ணன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed