November 27, 2021

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது…

1 min read
Spread the love

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.அ.அருண் தம்புராஜ், அவர்கள் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கெளதமன் ,
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் , கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடனிருந்தனர். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது.

தமிழக முதலமைச்சர் அவர்கள் மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணித்து துரிதப்படுத்திட அமைச்சர் பெருமக்களை நியமித்துள்ளார்கள். அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்களுக்கு தரமான சாலை, குடிநீர், தெருவிளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கிட வேண்டும். மக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும், வடகிழக்கு பருவமழை காலங்களில் தேங்கும் கழிவு நீரை உடனுக்குடன் கழிவுநீர் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் பாதிக்காத வகையில் அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு இடங்களும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகளில் தேவையான அளவு மணல் மூட்டைகள் கையிருப்பு உள்ளது. அதே போன்று நீச்சல் பயிற்சி பெற்ற முன்கள மீட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளும் தொடர்ந்து கண்காணித்து செயல்டுத்திட தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக சாதாரண மக்களுக்கு தேவையான இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவைகள் குறித்த பயனாளிகளை தேர்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன்,அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை,பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பாக அமைச்சர் அவர்கள் விரிவாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ.2,31,000-/-மதிப்பீட்டில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, வருவாய்த்துறை சார்பில் இயற்கை இடர்பாடு இடி மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் வீதம் ,ரூபாய் 8 இலட்சத்திற்கான காசோலையினையும் ,சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ரூ.86,000 மதிப்பீட்டில் 18 பயனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகையினையும், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.2,98,080 மதிப்பீட்டில் 8 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.24,350 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டியையும்,

ஊரக வளர்ச்சி முகமை துறையின் சார்பில் ரூ.22,16,000 மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு உதவியையும், சமூக நலத்துறை சார்பில் ரூ.18,00,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகப்பு திட்டத்திற்கான 37 பயனாளிகளுக்கு காசோலையும், மகளிர்திட்டத்தின் சார்பில் ரூ.16,40,000 மதிப்பீட்டில் 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி காசோலையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.3,82,500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் , ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் சுய உதவிக்குழுக்களுக்கு 10 நபர்களுக்கு ரூ.2,50,000 வங்கி கடன் காசோலை போன்ற மொத்தம் ரூ.77,93,930 இலட்ச மதிப்பீட்டில் 125 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ,அவர்கள் மாவட்ட கண்காணிப்பு ஆய்வுக்கூட்டத்தில் வழங்கினார்.

முன்னதாக நாகப்பட்டினம் புதிய கடற்கரையை மேம்படுத்துவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் கடற்கரைக்கான நீலநிறச்சான்று பெறும் வகையில் கடற்கரையை மேம்படுத்துவதற்காக 32 வகையான வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.10 கோடி ஓதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தொடர்ந்து நாகை 30-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள புனரமைப்பு செய்யப்பட்ட மகாத்மா காந்தி மண்டபத்தை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 20 இலட்சம் மதிப்பீட்டில் காளான் விதை உற்பத்தி ஆய்வுக்கூடத்தினை அமைச்சர் அவர்கள் திறந்துவைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர், மாட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, மாவட்டஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, துணை ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர்
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed