November 27, 2021

சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பனை விதைப்பு நிகழ்ச்சியை வட்டாச்சியர் தமிழ்செல்வன் துவக்கி வைத்தார்….

1 min read
Spread the love

சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் 3
ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி துவக்கி வைக்கபட்டது. இந் நிகழ்ச்சி மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் அழிச்சிவாக்கம் ஊராட்சி முழுவதும் 3 ஆயிரம் பனைவிதைகள் விதைக்கும் பணியை சாய் கிருபா நகர் பூங்கா பகுதியில் நடவு செய்து துவக்கி வைத்தார்.

முன்னதாக, மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்ட 3 ஆயிரம் பனைவிதைகளை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவர், மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் ஒப்படைத்தார். அப்போது சாய்கிருபா நகர் மற்றும் கணேஷ் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed