November 27, 2021

பொன்னேரி அருகே வைரஸ் காய்ச்சலால் 8 வயது சிறுமி பலி, தம்பி ஆஸ்பத்திரியில் அனுமதி, கிராமத்தில் துரை.சந்திரசேகர் எம்‌.எல்.ஏ. ஆய்வு…

1 min read
Spread the love

மீஞ்சூர் ஒன்றியம் ஏ. ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி காலனியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதே பகுதி அம்பேத்கர் தெருவில் கடந்த சில நாட்களாக தொண்டை வலி, வாந்தி, தலைவலியுடன் கூடிய மர்ம காய்ச்சல் பரவி வந்த நிலையில் அதே தெருவைச் சேர்ந்த வினோத் இவரது மனைவி ராணி இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோதினி (8) பெண் குழந்தை சோமஞ்சேரி தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். டேனியல் (4) ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களாக வினோதினிக்கு தொடர்ந்து காய்ச்சல், வாந்தி இருந்து வந்ததால் பொன்னேரி தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று பின்னர் நேற்று முன்தினம் மேல்கிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தை நல மருத்துவமனை கொண்டு சேர்த்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார்.

இந்நிலையில் வினோதினி தம்பி டேனியல் (6) காய்ச்சல் தலைவலி வாந்தியுடன் காணப்பட்டதால் குழந்தை நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறான். இவர்களுடைய தாய் தந்தைக்கும் பரவியதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதே தெருவில் குமார், அருண் தினேஷ், காயத்ரி, மற்றும் குழந்தைகள் உட்பட 4 குடும்பம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனை, மருத்துவமனை ஸ்டான்லி,எழும்பூர் குழந்தை நல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கோட்டாட்சியர் செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் ஆகியோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தற்போது வட்டார மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு மருத்துவ சோதனைகளும் சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 893947777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed