December 8, 2021

திருவண்ணாமலையில் தொடக்கப்பள்ளிகள் இன்று திறப்பு
ஸ்கேனர் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள்

1 min read
Spread the love

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 586 நாட்களாக தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் வீட்டிலேயே இருந்து படித்து வந்தனர். இந்த நிலையில் தொற்று குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விளையாட்டு அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் இன்று முதல் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் அனைத்து தொடக்கப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. திருவண்ணாமலையில் கோபுர தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்க பள்ளிக்கு இன்று காலை மாணவ – மாணவிகள் ஆர்வமுடன் வருகை தந்தனர். அவர்களுக்கு ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இதைப்போல திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் இன்று காலை மாணவர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலையில் பள்ளி சீருடையுடன் பள்ளி சீருடை அணிந்து ஏராளமான மாணவர்கள் சாலைகளில் செல்வதைப் பார்க்க முடிந்தது. சில பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் பள்ளி வாகனங்களிலும் மாணவ -மாணவிகள் வருகை தந்தனர். திருவண்ணாமலையில் மழை பெய்ததால் பலர் குடையுடன் பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளி திறப்பை முன்னிட்டு ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed