November 27, 2021

திருவண்ணாமலையில் தொடர் மழையால் தங்க வழியின்றி தவிக்கும் சாமியார்கள்

1 min read
Spread the love

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் அண்ணாமலையாக சிவன் இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை வரும் பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சிலர் சாமியார்களாக மாறிவிடுகின்றனர். அவ்வாறு சாமியார்களாக மாறிய பலர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வசித்து வருகின்றனர்.

சிவகதியை அடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் கிரிவலப்பாதையில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை இதனால் இளம் வயது முதல் முதிய வயது வரை உள்ள சாமியார்கள் வெயில் மற்றும் மழையால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. பாதிக்கப்பட்ட சாமியார்கள் தங்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஓட்டுரிமை கொண்ட அவர்களுக்கு எந்த உரிமையும் கிடைப்பதில்லை. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்துவிட்டதால் தங்கள் அத்தியாவசிய செலவுக்கு பணம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனால் கடைவீதி மற்றும் குடியிருப்பு பகுதிக்கும் சென்று சிலர் உதவி கேட்கின்றனர். ஆனால் பலர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தியானத்தில் இருக்கின்றனர்.
திருவண்ணாமலையில் வசிக்கும் ஏராளமான சாமியார்களுக்கு பக்தர்கள் மட்டுமே உதவி புரிந்து வருகின்றனர் .

இவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.
தற்போது நடைபாதைகளில் வசித்து வந்த அவர்கள் மழைநீர் செல்வதால் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தங்களுக்கு பக்தர்கள் ஓய்வு அறையை திறந்து விட வேண்டும் மேலும் கிரிவலப் பாதையில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகளை திறந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் . இதனை மனிதநேயத்துடன் அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed