December 8, 2021

விவசாயக் கல்லூரி மாணவ மாணவியர் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடினர்…

1 min read
Spread the love

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி (பஜன்கோவா ) நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயிலும் 45 மாணவ மாணவியர் ஊரக மற்றும் வேளாண் பணி அனுபவ பயிற்சி பாடத் திட்டத்தின் கீழ், அக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஷமராவ் ஜஹாகிர்தர் அவர்களின் வழிநடத்தலில்,

மேலும் அப்பாடத்திட்டத்தின் தலைமை ஆசிரியர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் அவர்களின் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பில், காரைக்காலில் புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெரியோர்களுக்கு இனிப்புகளும், மளிகைப் பொருட்களும் தீபாவளி பண்டிகை அன்பளிப்பாக வழங்கி, கலை நிகழ்ச்சிகளும் நடத்தி ஆதரவற்ற முதியோரை மகிழ்வித்தனர். அந்த பாடத் திட்டத்தில் மாணவ மாணவியர் சமூக சேவை செய்து அனுபவம் பெறுவது மேலும், விடுமுறை என்று பாராமல் பொது நலன் கருதி களம் கண்டு தியாகம் , சகிப்புத்தன்மை போன்ற உணர்வுகளை வளர்த்துக்கொள்வது முக்கிய நோக்கமாகும்.

அந்த அடிப்படையில் காரைக்காலில் களப்பணியாற்றி வரும் 45 மாணவ மாணவியர் அந்த இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகை அன்பளிப்பு வழங்க தாமாகவே முன்வந்து தங்கள் அனைவரிடமும் நன்கொடை பெற்றனர். மேலும், கல்லூரி முதல்வரும் மற்றும் பாடத் திட்டத்தின் தலைமை ஆசிரியரும் அவரவர் பொறுப்பில் இருந்து மாணவர்களுக்கு நிதி உதவி செய்தனர். மொத்தம் 10,000 ரூபாய் நிதி திரட்டினார். அதை பயன்படுத்தி, இனிப்புகள் மற்றும் மளிகைப் பொருட்களை மாணவிகள் அக்ஷய, சாதனா, ஜனனி, ரேஷ்மா மாணவர்கள் முருகன், சந்திரமௌலீஸ்வரன், திலீபன், துளசிராம் மற்றும் சிவானந்தம் ஆகியோர் சுமார் 50 முதியோருக்கு வழங்கினார்.

முதியோர்களை உற்சாகப்படுத்த பாடல் பாடுவது, நடனம் ஆடுவது போன்ற கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் அருந்ததி, தேசியா, கவுசல்யா மற்றும் மோஹனப்பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிறகு, அன்று 96 வயது பூர்த்தி அடைந்ந நடராஜன் அவர்களின் பிறந்த நாளை மாணவ மாணவியர் கொண்டாடினர். சுமார் 150 வருடப் பாரம்பரியம் மிக்க அந்த முதியோர் இல்லத்தை பற்றி அருட்சகோதரி இருதயமேரி அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
தலைமை அருட்சகோதரி அன்னம்மா அவர்கள் பேசுகையில் தலைமைப் பண்பு என்பது சேவை செய்வதே என்றும் கீழ்படிதலின் மகத்துவத்தையும் பற்றி விளக்கினார்.
அருட்சகோதரி தேரேசியா அவர்கள் மாணவ மாணவியரின் சேவை மனப்பான்மையை அங்கீகரித்து அவர்களை வாழ்த்தினார்.

இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.அனந்த்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசினார். முன்னதாக அனைவரையும் மாணவர் முகமது அசீமுத்தீன் வரவேற்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாணவி ஜோ ஷைனி அனைவருக்கும் நன்றியுரைத்தார்.

செய்தியாளர் – மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed