December 8, 2021

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா பாதுகாப்பு பணிகளில் இந்த ஆண்டு 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேட்டி…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
நாளை முதல் இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா உற்சவங்கள் துவங்க உள்ள நிலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, கோயில் பொறுப்பு இணை ஆணையர் அசோக் குமார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் உடனிருந்தனர் .

வருகிற 10ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முன்னிட்டு அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பலிபீடம் தூய்மை செய்யப்பட்டது. அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வளாகம் முழுவதும் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

இந்த ஆண்டு தேர் திருவிழா கோயில் பிரகாரத்திற்கு உள்ளேயே ஆகம விதிகளின்படி நடைபெறும், அப்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கிரிவலம் மற்றும் கோயில் வளாகத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆண்டுதோறும் சராசரியாக தீபத் திருவிழாவிற்கு 25 லட்சம் பக்தர்கள் வருவதால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது.

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிகளில் இந்தாண்டு 5 ஆயிரம் காவல்துறையினர் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பத்தாம் தேதி முதல் கார்த்திகை தீபம் முடியும் வரை நகருக்கு வெளியே 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும், பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி கிடையாது, கரோனா தடுப்பூசி போடாதவர்கள் கரோனா பரிசோதனை செய்த நெகடிவ் சான்றுடன் வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed