November 27, 2021

காரைகாலில் கொடுவா மீன் வளர்ப்பில் அதிக இலாபம் – ராஜிவ் காந்தி மீன் வளர்ப்பு மற்றும் செயல் விளக்கப் பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி…

1 min read
Spread the love

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி (பஜன்கோவா ) நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயின்று கொண்டு காரைக்காலில் களப்பணி ஆற்றி வரும் 43 மாணவ மாணவியர், ஊரக மற்றும் வேளாண் பணி அனுபவ பயிற்சி பாடத் திட்டத்தின் கீழ் அக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஷமராவ் ஜஹாகிர்தர் அவர்களின் வழிநடத்தலில், மேலும் அப்பாடத்திட்டத்தின் தலைமை ஆசிரியர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் அவர்களின் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பில், காரைக்கால் மாவட்டம் கருக்களாச்சேரியில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி மீன் வளர்ப்பு மற்றும் செயல் விளக்கப் பண்ணையில் அரை நாள் பயிற்சியில் பங்கேற்றனர்.

இப்பயிற்சியில் பண்ணையின் மூத்த விஞ்ஞானி அதிகாரி (பொ) முனைவர். ஜி.கே தினகரன் விரிவுரையின் போது, கொடுவா மீன் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு பற்றிய விரிவான தகவல்களை எடுத்துரைத்தார்.
வளர்ப்பு முறை, வளர்ப்பில் சந்திக்க கூடும் சவால்கள், மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கான அறிவுரைகளை மாணவர்கள் கேட்டறிந்தனர்.

கடல் வளத்தின் அத்தியாவசியம், மீன் பிடி தடை காலத்தின் முக்கியதுவம், கடல் உணவுகளின் நன்மைகள் பற்றிய தகவல்களும் எடுத்துரைக்கப்பட்டது. மீன் வளர்ப்பு குறித்த சந்தேகங்களுக்கு மாணவர்கள் விளக்கம் கேட்டறிந்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ரேவதி, முகமது அசீமுத்தீன், ஜோ ஷைனி, சிவசுந்தர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் – மணிவண்ணன் / நாகை
நிழல் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed