November 27, 2021

ராஜபாளையம் பகுதியில், கடையில் வியபாரம் செய்து கொண்டு இருந்த பெண்ணை வெட்டி கொண்றவன் கைது…

1 min read
Spread the love

இராஜபாளையம் அருகே உள்ள துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவர் அதே பகுதியில் சிறிய அளவில் ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இந்திராணி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அந்த பெட்டிகடையில் வியாபாரம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த பல வருடங்களாக இந்திராணியை பின் தொடர்ந்து வந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தவர்கள். இது குறித்து கடந்த வருடம் ராஜபாளையம் காவல் நிலையத்தில் கணேசன் தன்னுடைய மனைவியை தொடர்ந்து பரமசிவம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார் என்று புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகும் பரமசிவம் திருந்தாமல் இந்திராணிக்கு என் மீதா நீங்கள் புகார் கொடுக்கிறீர்கள், புகார் கொடுத்தால் மட்டும் நான் பயந்து விடுவேன.. என்று கூறி மீண்டும் கிண்டலும் கேலியும் செய்ததுடன் மிரட்டி வந்துள்ளார். அதனால் கணேசன் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமசிவம் மீது ராஜபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மன்னவன் பரமசிவம் மீது வழக்குபதிவு செய்தது கைது செய்தார். அதனால், ஆத்திரமடைந்த கணேசன் அதன் பிறகும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இந்திராணியை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததுடன் நான் அவ்வளவு மிரட்டியும் என் மீது புகார்க்கிறாயா, உன்னை நான் அடைந்தே தீருவேன் அல்லது கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த தனது கணவர் கணேசனை சாப்பிட அனுப்புவதற்காக இந்திராணி கடைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த பரமசிவம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக இந்திராணியை கழுத்து , தலை , முகம், கைகள் போன்ற இடங்களில் பலமுறை வெட்டியுள்ளார். அதனால் இந்திரனுடைய கழுத்துப் பகுதி மற்றும் கைகள் விரல்கள் மீது வெட்டு விழுந்ததில் இந்திராணி ரத்தவெள்ளத்தில் கடையிலேயே மயங்கி விழுந்தார். அதை பார்த்துக்கொண்டிருந்த கணேசன் தடுக்க முயன்றபோது அவரையும் வெட்டிய பரமசிவம் தன் மீது வெட்டு விழாமல் கணேசன் தப்பித்தார். உடனே அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், உன்னையும் வைத்துக்கொள்ளாமல் விடமாட்டேன் என்று மிரட்டி அவ்வாறு கூறிக் கொண்டே ஓடினான்.

தகவலறிந்த ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் மன்னவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திராணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகர் அவர்களின் உத்தரவின் பேரில், இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில், இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் மன்னவன் விரைந்து தீவிரமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்தனர். காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed