November 27, 2021

மனிதநேயம் மரத்துப் போன மனிதர்கள் நடுவில், மனிதனும் தெய்வம் ஆகலாம் என்பதை நிரூபித்த பெண் ஆய்வாளர் ராஜலட்சுமி…

1 min read
Spread the love

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை பூங்காவில் உதயா என்பவர் பணியாற்றி வந்தார். இந்த தொடர் மழையின் போது கல்லறை தோட்டம் பகுதிலேயே அவர் தங்கியிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த இடம் போதிய பாதுகாப்பில்லாத பகுதியாக இருந்ததால் தொடர் மழையில் நனைந்து குளிரில் அதே இடத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

அதை பார்த்த அப்பகுதி மக்கள் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வராமல் காவல் நிலையத்திற்கு போன் செய்து கல்லறைத் தோட்டத்தில் ஒருவர் இறந்து கிடக்கிறார் என்று தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜலட்சுமி அவர்கள் அங்கே விழுந்து கிடந்த உதயாவை பார்த்து முதல் உதவி அளித்து பரிசோதித்து உள்ளார்.

அப்போது பொதுமக்கள் தகவல் கொடுத்தது போல் அவர் இறக்கவில்லை என்பதும் உயிருடன் இருக்கிறார் என்பதும் தெரிய வந்தவுடன் அ உடனடியாக மனிதநேயமிக்க அந்த பெண் ஆய்வாளர் ராஜலட்சுமி அவர்கள் உடனே மயங்கி கிடந்த உதயாவை தோளில் தூக்கிக் கொண்டு கல்லறைத் தோட்டத்தை விட்டு வெளியில் வந்து ஆட்டோவில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் அங்கு தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed