November 27, 2021

” ஆரணி ஆற்றின் கடைநிலை கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான்” என ஆரணி ஆற்றின் கடைநிலை கிராம மக்கள் குற்றச்சாட்டு…

1 min read
Spread the love

ஆந்திர மாநிலம் நகிரி மலையில் கார்வெட் நகரில் உருவாகி, தமிழ்நாட்டில் உள்ள பழவேற்காட்டில் கடலில் கலக்கும் ஆரணி ஆறு, ஆந்திராவில் 65.20 கிலோமீட்டரும், தமிழகத்தில் 66.40 கிலோமீட்டரும், மொத்தம் 131.60 கிலோமீட்டர் பாய்ந்து பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதற்கிடையே, ஆரணி ஆற்றின் குறுக்கில்
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கட்டில் நீரை தேக்கி வைத்து, மழைகாலங்களில் அதிகபடியாக வர கூடிய உபரி நீரை மீண்டும் ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.
அதன்படி, அந்த பிச்சடூர் அணையில் இருந்து,

கடந்த மாதம் 25ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது எனவும், அதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும், திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் அறிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி அணையில் இருந்து , சத்திவேடு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக வந்திருந்து தண்ணீரை திறந்து வைத்தார். 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக கூறப்பட்டது. அவைகள் நான்கு மதகுகளின் வழியாகவும் வெளியேறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் , 10 நிமிடத்தில் அணையின் 3 மதகுகள் மூடபட்டுவிட்டது. ஒரு மதகின் வழியாக மட்டும் சில மணி நேரம் மட்டுமே தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதனால் தண்ணீர் ஆந்திராவின் எல்லையில் உள்ள சுருட்பள்ளி அணையை கடந்து பெரிய அளவில் தமிழக பகுதிக்குள் வரவில்லை.

இதே போன்ற காட்சி கடந்த ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் அதிக மழை பெய்ததால் 26ம் தேதி மாலை ஒரே சமயத்தில் அதிக அளவில் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதில், ஊத்துகோட்டை பகுதியில் இருந்த தரைபாலம் சேதம் அடைந்து ஊத்துகோட்டைக்கும் திருவள்ளூர் இடையே போக்குவரத்தும் தடைபட்டது.

இன்றும் அதேபோல், ஆரணி ஆற்றின் கரை உடைந்து வெள்ளநீர் சூழ்ந்து உள்ள இதே கிராமங்களான பெரும்பேடு குப்பம், கம்மார்பாளையம், வஞ்சிவாக்கம், பிரளையம்பாக்கம், ஆண்டார்மடம், கம்மார்மடம், வரை உள்ள மேலும் பல கிராமங்கள் கடந்த ஆண்டும் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ளத்தில் மூழ்கின, அதனால் அப்பகுதிகளில் உள்ள ஆயிரகணக்கான நெல் பயிற்கள் மூழ்கி போயின, வெள்ளநீர் வீடுகளில் புகுந்ததால், மக்கள் கடப்பாக்கம், திருபாலைவனம், ஆண்டார்மடம், பழவேற்காடு, உட்பட பல இடங்களில் புயல் பாதுகாப்பு மையங்களிலும், பள்ளிகளிலும், முகாம்கள் அமைக்கபட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர். அதே… காட்சிகள் தான் இன்றும் ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதியில் உள்ள இந்த கிராமங்களின் காட்சியாக இருந்து வருகிறது .

ஆரணி ஆற்றின் கடைநிலை கிராமங்களான இந்த கிராமங்களில் ஒவ்வொரு மழை காலங்களிலும் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு வரும்போதெல்லாம் ஊரினுள் வெள்ளம் புகுந்து கிராம மக்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், விவசாய நிலங்களில் மணல்கள் படிந்து விவசாயம் பாதிக்கப் படுவதும் வாடிக்கையான ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் “பொதுப்பணித்துறையின், ஆரணியாறு வடிநில கோட்ட அதிகாரிகள் தான்” என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காரணம், பிச்சாட்டூர் அணை முதல் பழவேற்காடு கழிமுகங்கள் வரை ஆரணி ஆறு பராமரிப்பது தமிழக பொதுப்பணித் துறை நிர்வாகம் தான். இதற்கு இடைப்பட்ட
தொலைவில் உள்ள இந்த ஆரணி ஆறு துவக்கத்தில் மிகவும் அகலமாகவும் கடைநிலை பகுதியில் மிகவும் குறுகியும் செல்வது தான் இதற்கு காரணம் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உதாரணமாக அந்த ஆரணி ஆறு பனபாக்கத்தில் 200 மீட்டரும், செங்காத்தா குளத்தில் 225 மீட்டரும், பாலேஸ்வரத்தில் 236 மீட்டரும் ஓடி வரும் ஆரணி ஆறு இறுதியாக கடைநிலை பகுதியான அத்தம்மசேரி ரெட்டிபாளையத்தில் மிகவும் குறுகி போய் 100 மீட்டரில் தான் ஓடுகிறது, மேலும் அதை கடந்து போகும் போது, ஆறின் அகலம் மேலும் குறைந்து போவதாலும், கரைகளின் கட்டமைப்புகள் சரியில்லாத காரணத்தாலும், சரியாக பராமரிக்கப்படாத காரணத்தாலும் தான், மேலும் இந்த கிராம மக்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை போலவே இந்த மழை வெள்ள பாதிப்பையும் ஆண்டுதோறும் வரக்கூடிய ஒரு நிகழ்வாக ஆரணி ஆற்றின் கடைநிலை கிராம மக்கள் தங்கள் மனதில் பதிய செய்து விட்டனர். அந்த அளவிற்க்கு இந்த ஆற்றின் கடைநிலை பகுதி கிராமங்கள் ஆண்டுதோறும் மழை காலங்களில் அதிகம் பாதிக்கபடுகின்றன. என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், பாதுகாக்க வேண்டும் என்றும் முனைப்புடன் செயல்படும் தமிழக முதல்வர் அவர்கள் நீர்வளத்துறை மூலம் உயர் அதிகாரிகளைக் கொண்டு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக “கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் ஆரணியாறு வடிநில கோட்ட அதிகாரிகள் தான் “ என்பதற்கு பல சாட்சிகள் உள்ளன. உதாரணமாக, ஆண்டார்மடம் பகுதியில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் பாலப் பணிகள் குறித்தும், வஞ்சிவாக்கம் பகுதியில் மழைக்காலங்களில் விளைநிலங்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய உபரி நீர் ஆற்றில் கலப்பதற்காக ஒரு தடுப்பு அணை அமைக்கப்பட்டது. அந்த இரண்டு பணிகளை உதாரணமாக வைத்து விசாரணை செய்தாலே, இந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஊழல் வெளியுலகத்திற்கு தெரிய வரும்.

இதுபோல, “இந்த ஆரணி ஆற்றில் நடைபெற்ற அனைத்து பணிகளையும் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த ஆரணி ஆற்றின் பெயரை சொல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் மட்டும் ஊழல் செய்து அடித்த கொள்ளையின் அளவை அளவிட வேண்டும் ” என்று ஆரணி ஆற்றின் கடைநிலை கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த சில தினங்களில் வஞ்சிவாக்கம் ஆண்டார்மடம், பிரளயம்பாக்கம், உள்ளிட்ட ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதியிலுள்ள மேலும் பல கிராம மக்கள் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed