November 27, 2021

கார்த்திகை தீப திருவிழா அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நான்காம் நாள் காலை உற்சவம் விநாயகர் சந்திரசேகரர் நான்கு பெரிய கொடைகளுடன் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி…

1 min read
Spread the love

திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நான்காம் நாள் காலை உற்சவம் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பின்னர் ஐந்தாம் பிரகாரத்தில் நான்கு கொடைகளுடன் சந்திரசேகரர் பவனி வந்தனர், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


நினைத்தாலே முக்திதரும் அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப
திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும் அதன்படி இந்த
ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கியது, அதனை தொடர்ந்து நான்காம் நாள் காலை உற்சவத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் விநாயகர் சந்திரசேகரருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்தனர். 

அருணச்சலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தீப திருவிழா கடந்த 10 ஆம் தேதி தொடங்கி வரும் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் போது விநாயகர் மற்றும் சந்திரசேகரர் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார், ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை சுற்றி பவனி வந்தனர். நான்காம் நாள் தீப திருவிழா காலை உற்சவத்தில் முதலில் விநாயகர் இரண்டாவதாக சந்திரசேகரர் ஒன்றன்பின் ஒன்றாக சென்று திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை சுற்றி பவனி வந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed