December 8, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும் சிட்டா, அடங்கல்கள் உடனுக்குடன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் தகவல்…

1 min read
Spread the love

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயிர்க் கடன் வாங்கவும், பயிர் காப்பீடு செய்வது உள்ளிட்ட அரசின் உதவிகளை பெறவும் கிராம நிர்வாக அளவில் அவர்களுக்கு சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும் விவசாயிகளுக்கு பயிர் கடன் பெறுவது, பயிர் காப்பீடு செய்வது உள்ளிட்ட வேளாண்மை துறையின் மூலம் பயன்களை அடைவதற்கு விவசாயிகளுக்கு சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் மிகவும் அவசியம் தேவைப்படக்கூடிய நிலையில் உள்ளதால் அவைகள் ஒவ்வொரு விவசாயிக்கும் உடனுக்குடன் கிடைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அவர்கள் அப்பணியை துவக்கி வைத்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும் அந்த அதிகாரியின் வாயிலாக விவசாயிகளுக்கு சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed