December 8, 2021

அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட வயல்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்

1 min read
Spread the love

தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது சில குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டி கொல்லை கிராமத்தில் உள்ள வயல்களை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆர்.டி.ஓ சொர்ணராஜ் தாசில்தார் காமராஜ் சேர்மன் மகேஸ்வரி பி.டி.ஓ அசோகன் சிங்காரவேல் முன்னிலையில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கொடிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட கொடிவயல் கிராமத்தில் உள்ள பல்வேறு வீடுகளை பார்வையிட்டார் மழையின் காரணமாக சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு அவர்களுக்கு தன் சொந்த நிதியிலிருந்து நிதி வழங்கினார்.

அவருடன் கவுன்சிலர்கள் சௌந்தரராஜன் மாரியம்மாள் கண்ணன் ஊராட்சி தலைவர் கணேசன் இ கம்யூ ஒன்றிய செயலாளர் முத்துசாமி மதிமுக ரங்கசாமி கொடிவயல் செந்தில் ரவி துரைசெல்வராசு உட்பட பலர் உடன் இருந்தனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed