November 27, 2021

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி தலைவர் மருத்துவர்.அ.அருண்தம்புராஜ், காரைக்கால் தனியார் துறைமுகத்தில் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட யூரியாவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…

1 min read
Spread the love

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.அ.அருண்தம்புராஜ், அவர்கள் , காரைக்கால் தனியார் துறைமுகத்தில் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட யூரியாவை நேற்று 15-12-2021 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது ;
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எடுத்த சீரிய முயற்சியால் அனைத்து மாவட்ட விவசாய பெருமக்களின் பயன்பாட்டிற்காக 2 கப்பல்கள் மூலம் 90 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 30 ஆயிரம் டன் யூரியா நம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 1,500 மெ.டன் யூரியா மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இங்கு இறக்குமதி செய்யப்படும் யூரியாவை மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி அனுப்பப்படும் யூரியாவை தினசரி ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தவும்,

அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களுக்கு இரயில்கள் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் 15 தினங்களுக்குள் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் இறக்குமதி செய்யப்படும் மொத்த யூரியாவையும் அனைத்து மாவட்டங்களுக்கும் துரிதமாக அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். அ.அருண் தம்புராஜ், அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் சென்னை வேளாண்மை துறை இணை இயக்குநர்(உரங்கள்) எஸ்.ஷோபா, வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு என்.குமரன், வேளாண்மை அலுவலர் தரக்கட்டுப்பாடு திரு.அரவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed