December 8, 2021

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கு கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்…

1 min read
Spread the love

இராஜபாளையம் அருகே உள்ள புதூர் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது இங்குள்ள ஐயப்பன் கோவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதிரியே கட்டப்பட்டு அங்கு நடக்கும் பூஜைகள் .அங்கு நடை திறக்கும் போது இங்கம் நடை திறக்கப்படும் வழக்கம் .

அதேபோல் தற்போது சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது கார்த்திகை 1-ஆம் தேதி ஐயப்ப பக்தர்கள் மண்டல கால பூஜைக்கும் அதைத்தொடர்ந்து தை 1ஆம் தேதி மகரஜோதிக்காகவும் மாலை அணிந்து கொண்டு தங்களுடைய விரதத்தை தொடங்குவது வழக்கம் அதேபோல் காத்திக்கை 1ம் தேதியான இன்று இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில்கள் மற்றும் அனைத்து கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர் .

அதில் ஒரு பகுதியாக புத்தூர் ஐயப்பன் கோவிலில் அதிகாலையிலிருந்து மாலை அணிந்து கொள்வதற்காக ஐயப்ப பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட்டமாக வந்து மாலை அணிந்து கொண்டு தங்கள் விரதத்தை தொடங்கினர்.

செய்தியாளர் – வி காளமேகம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed