December 8, 2021

தமிழக முதல்வர் காணொளி காட்சி வழியாக மன்னார்குடியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தையும், சேமிப்பு கிடங்கு மற்றும் அலுவலகக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

தமிழக முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி வழியாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மன்னார்குடியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் ரூ.1 கோடியே 33 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு மற்றும் அலுவலகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது… திருவாரூர் மாவட்டம் ,மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட்டத்தில் 4700 மெ.டன் கொள்ளளவு உள்ள கிடங்குகள் மற்றும் பரிவர்த்தன கூடங்களின் வசதிகளை கொண்டு, மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் மற்றும் கூத்தாநல்லூர் வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை சேமித்தும், பொருளீட்டுக்கடன் பெற்றும் பயன் வருகின்றனர்.

மேலும், ஆண்டு தோறும் சராசரியாக மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.150.00 இலட்சம் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டு சுமார் 100 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அந்தவகையில் , புதிதாக திறக்கப்பட்டுள்ள 500 மெ.டன் கொள்ளவு கொண்ட கிடங்கில் சுமார் 3000 முதல் 4000 நெல் மூட்டைகள் சேமித்து கூடுதலாக பொருளீட்டுக்கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன்,
தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியம்,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாளர் சரஸ்வதி , உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed