December 8, 2021

திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர், போலிசார் சமரசம்…

1 min read
Spread the love

மதுரை அருகே திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில், பள்ளி மாணவர்கள் பஸ்ஸை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள
வேடர் புளியங்குளம், சாக்கிலிபட்டி போன்ற கிராமங்களுக்கு பேருந்துகள் சரியாக வந்து செல்வதில்லை எனவும், மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்களை பேருந்துகளை நிறுத்தி ஏற்றி செல்லாமல் புறகணித்து செல்வதாகவும், மாணவர்கள் பேருந்தினை நிறுத்தி மறியல்
செய்தனர்.

இதனால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும், திருப்பரங்குன்றம் காவல் நிலைய போலிசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மாணவர்களுடைய கோரிக்கை குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் மாணவர்கள் சார்பில் பேசுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

செய்தியாளர் – வி காளமேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed