November 27, 2021

தமிழக முதல்வர் அவர்களால் காணொலி காட்சி வழியாக திருவாரூர் மாவட்டத்தில், கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது…

1 min read
Spread the love

தமிழக முதலமைச்சர் அவர்களால் தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வழியாக தாட்கோ, தஞ்சாவூ
ர் கோட்டம் சார்பில் திருவாரூர் மாவட்டம் , திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கேடிஆர் எஸ்டேட் பகுதியில் ரூ.238.09 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட , கேடிஆர் எஸ்டேட் பகுதியில் 100 மாணவர்கள் தங்குவதற்கு ஏதுவாக ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டடம் தமிழக முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இவ்விடுதியானது ,
மாணவர்கள் தங்குவதற்கு 854.46 ச.மீ பரப்பளவில் 11 அறைகள் கொண்ட வசதிகளுடன் மூன்று தளமாக கட்டப்பட்டுள்ளது. மேலும், தரை தளத்தில் காப்பாளர் அறை, சமையலறை, பொருள் வைப்பு அறை, சமையல் எரிவாயு அறை, உணவருந்தும் அறைகளும், முதல் தளத்தில் பொழுதுபோக்கு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு தளத்திலும் மாணவர்களுக்கு 4 குளியல் அறைகள்,4 கழிவறைகள், மொத்தம் 12 குளியல் அறைகளும் ,12 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பிற்காக விடுதி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, உயர்ந்த வண்ணப்பூச்சுடன் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் நுழைவு வாயிலில் இருந்து விடுதிக்கு சென்று வர வசதியாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.விடுதி கட்டிடத்திற்கு மும்முனை மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. ஒரு ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
மாற்றுதிறனாளிகளுக்கு தனியே குளியல் அறை மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ,விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், பழனியாண்டவர் திருக்கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed