November 27, 2021

மதுரையில் நடந்த தெற்கு ரயில்வே நிர்வாக ஆலோசனை கூட்டத்தில் தென்மாவட்ட எம் .பி கள் கூடுதல் ரயில் வசதிகள் கேட்டு கோரிக்கை…

1 min read
Spread the love

தெற்கு இரயில்வே – பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் – 2021 தெற்கு ரயில்வே சார்பில் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் ரயில்வே காலனியில் உள்ள வைகை இல்லத்தில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் மதுரை ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு மற்றும் கேரளா பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் ரயில்வேயின் பொது மேலாளர் ஸ்ரீ பி.ஜி. மாலியா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ பிரஃபுல்லா ஷர்மா , மதுரை மண்டல மேலாளர் ஸ்ரீ பி . ஆனந்த் மற்றும் தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர் .

வைகோ எம்.பி ; தென் மாவட்டம் மற்றும் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்கள், கோரிக்கைகள் அடங்கிய 5 பக்க அறிக்கை அளித்துள்ளேன். இவற்றிலுள்ள முக்கியக் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன” என்று தெரிவித்தார்.

கனிமொழி எம்.பி ; தூத்துக்குடியில் இருந்து நெல்லை, கோவை, சென்னைக்குப் புதிய ரயில் சேவைகள் தொடங்க வேண்டும். தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகப் புதிய ரயில் பாதை சர்வே எடுத்தது கிடப்பிலுள்ளது. தென் மாவட்ட ரயில்களில் பெட்டிகள் போதிய பராமரிப்பு இன்றி பழைய ரயில் கோச்களைப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பெட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். புதிய ரயில் பாதை, சேவைகள் குறித்து வலியுறுத்தியுள்ளேன், என்று தெரிவித்தார்.

.

ப.ரவீந்திரநாத் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசிய போது கூறியதாவது; தேனி மற்றும் மதுரை இடையேயான அகல ரயில் பாதை சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் தேனி முதல் போடி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் , ரயில் எண் . 20601/20602 , சென்னை சென்ட்ரல்- மதுரை – சென்னை சென்ட்ரல் வாரத்திற்கு மூன்றுமுறை இயங்கும் குளிர்சாதன விரைவு ரயிலை போடிநாயக்கனூர் வரை இயக்க வேண்டும் என்றும் , திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் பகுதி வரை அகல ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என்றும். பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருப்பதி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன். என கூறினார். மேலும், மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தேன் அதனைத்தொடர்ந்து இந்த இரண்டரை ஆண்டு காலங்களில் 75 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன இன்னும் ஆறு மாதங்களில் பணி முழுமையாக நிறைவடைந்து விடும்
ரயில்வே துறையில் வடமாநிலத்தவர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல் தமிழர்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் இதுதான் என் கருத்தாகும் எனவும் கூறினார்.

கார்த்தி சிதம்பரம் எம்.பி ; சிவகங்கை தொகுதியில் நாட்டரசன்கோட்டை, செட்டிநாடு ஆகிய ரயில்வே நிறுத்தங்களில் ரயில் நிறுத்தம் கேட்டுள்ளோம். கூட்டத்தில் பெரும்பலான கோரிக்கையை நிராகரித்தனர். எந்தக் கோரிக்கை விடுத்தாலும் அதிகாரம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இ-க்யூ நடைமுறையை ஃபேக்ஸில் அனுப்பவதிற்கு பதில் இ-மெயிலில் பெறலாம் என்ற கோரிக்கையைத்தான் ஏற்றுள்ளனர். ரயில்களில் வடநாட்டு உணவுகளே வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் கரோனா காலகட்டம் முடியும்வரை இந்த உணவுதான் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர், என்று கூறினார்.

செய்தியாளர் – வி காளமேகம் / மதுரை நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed