December 8, 2021

இராஜபாளையம் பகுதியில்
செயின் பறிப்பு மற்றும் வீட்டு உபயோக பொருள் கடையில் புகுந்து கொள்ளை …

1 min read
Spread the love

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் உள்ள ஞானசம்பந்தம் தெருவில் விஷ்ணுசங்கர் (வயது 32 )இவருக்கு திருமணமாகி சுபஸ்ரீ (வயது 28) திருமணம் செய்து இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் . இந்த நிலையில் சுபஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் விலாசம் விசாரிப்பது போல் சென்று சுரேஷ் என்ற பெயர் கூறி விசாரித்துள்ளார். அந்த பெண் அப்படி யாரும் எனக்கு தெரியாது என கூறிய நிலையில் தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற சுபஸ்ரீ யை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் சுபஸ்ரீ கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார் சுபஸ்ரீ இறுக்கி பிடித்த நிலையில் கூச்சலிட்டதை அடுத்து குற்றவாளி தப்பி ஓடியதை நிலையில் சுபஸ்ரீ கழுத்தில் காயம் ஏற்பட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்
பட்டபகலில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக போலீஸ்சார் தேடி வருகின்றனர். நேற்று இரவு இராஜபாளையம் மதுரை சாலையில் பூட்டிய கடையை உடைத்து கம்ப்யூட்டர் மானிட்டர் டிவி 20 ஆயிரம் பணம் திருடுபோன நிலையில் இன்று பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இராஜபாளையம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . இந்த இரண்டு குற்ற சம்பவங்களும் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால் போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.. மற்றொரு சம்பவத்தில் ராஜபாளையத்தில் பூட்டிய வீட்டு உபயோகப் பொருள் கடையில் கம்ப்யூட்டர் மற்றும் பணம் கொள்ளை விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு அருகே உள்ள தனியார் சொந்தமான வீட்டு உபயோகப் பொருள் விற்கும் கடையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து கடையில் இருந்த கம்ப்யூட்டர் டிவி மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர் .

இதுகுறித்து கடை உரிமையாளர் தினேஷ் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம். நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed