November 27, 2021

மதுரை பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி – காவல்துறை விசாரணை…

1 min read
Spread the love

மதுரை பழங்காநத்தம் நேருநகர் பகுதியில் தனியார் பள்ளியில் இன்று காலை +2 மாணவி இரண்டாவது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்தார். அதில் அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பள்ளி நிர்வாகம் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவி பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்ததற்கான காரணம் குறித்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினருக்கு விசாரணை நடத்திவருகின்றனர்.
முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணை மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மதுரை தனியார் பள்ளி கட்டிடத்தில் இருந்து 12ஆம் வகுப்பு மாணவி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – வி காளமேகம் / மதுரை நிழல் . இன் – 8939476778

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed